எதிர்வரும் 18,19,20 ஆகிய திகதிகளில் நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவதற்கு இன்றைய கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, எதிர்வரும் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இதேவேளை,கொழும்பு துறைமுக பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய வியாக்கியானம் கடந்த வாரம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டிருந்ததாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.