மேற்கு வங்க மாநிலத்தில் நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட உள்ளது.
இது தொடர்பாக மாநில அரசின் தலைமை செயலர் அலாபன் பந்தோபாத்யாயா வெளியிட்டுள்ள உத்தரவில்,
“கொரோனா பரவல் அதிகரித்து உள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்காக நாளை முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்படுகிறது.
இதன்போது, அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் மூடப்படும். கோல்கட்டா பெருநகர தொடருந்து சேவை உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்படும்.
அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் காலை 7 முதல் காலை 10 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். .“ என்றும் கூறியுள்ளார்.