ஜப்பானின் ரோக்கியோ நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு கனேடிய விளையாட்டு வீர்ர்களை அனுப்புவது குறித்து நாட்டில் இருவேறு கருத்துக்கள் நிலவுவதாக, ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
கொரோனா தொற்றினால் ஒரு வருடம் தாமதமாகியுள்ள ஒலிம்பிக் போட்டியில் கனேடிய வீர்ர்கள் பங்கேற்க வேண்டும் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என்று 42 வீதமானோர் இந்தக் கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளனர்.
எனினும், கனேடிய வீர்ர்களின் குழு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்று 39 வீதமானோர் கருத்து கூறியுள்ளனர்.
விளையாட்டுப் போட்டிகள் பாதுகாப்பாக நடக்கும் என்று 46 வீதமானோரும், இல்லை என்று 35 வீதமானோரும், பாதுகாப்பாக நடக்கும் என உறுதி இல்லை என்று 19 வீதமானோரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.