காசாவில் இடம்பெறும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கண்டித்து, ரொறன்ரோவில் நேற்று பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
Nathan Phillips Square இல் ஒன்று கூடிய ஆயிரத்துக்கும் அதிகமானோர், பலஸ்தீனக் கொடிகளுடன், இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பலஸ்தீன இளைஞன் இயக்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், இஸ்ரேலின் தாக்குதல்களுக்குள்ளாகியிருக்கும், பலஸ்தீனர்களுக்கு ஆதரவு தெரிவித்து கோசங்களை எழுப்பினர்.
வீடுகளில் தங்கியிருக்கும் உத்தரவை மீறி பெருமளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
அதேவேளை, மேலும் பல டசின் கணக்கானவர்கள், Nathan Phillips Square பகுதியில் இஸ்ரேலிய கொடிகளுடன், இஸ்ரேலுக்கு ஆதரவான போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் இருபகுதியினருக்கும் இடையில் மோதல்கள் ஏற்படக் கூடிய வாய்ப்புகளை கருத்தில் கொண்டு காவல்துறையினர் அவர்களைத் தனித்தனியாக பிரிக்க ஒழுங்குகளைச் செய்திருந்தனர்.