சிறிலங்கா முழுவதும் அமுலில் உள்ள பயணத் தடை நாளை அதிகாலை நான்கு மணியுடன் தளர்த்தப்படவுள்ளது.
இந்த நிலையில் தேசிய அடையாள அட்டை இலக்க முறைமைக்கு அமைய நாளைய தினம் முதல் பொதுமக்களுக்கு வெளியே செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் என காவல்துறை பேச்சாளர் பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அத்துடன் தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் கடவுச்சீட்டு அல்லது சாரதி அனுமதிப்பத்திரத்தின் இறுதி இலக்கம் அன்றி கடவுச்சீட்டு மற்றும் சாரதி அனுமதிப்பத்திரத்தில் உள்ள தேசிய அடையாள அட்டை இலக்கத்தின்படியே நாளை வெளியே செல்ல முடியும் என காவல்துறை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.