சிறிலங்காவில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கேகாலை, புத்தளம், கண்டி குருணாகல், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
சீரற்ற காலநிலை காரணமாக கடந்த 13ஆம் திகதி முதல் இதுவரை 11 ஆயிரத்து 796 குடும்பங்களைச் சேர்ந்த 46 ஆயிரத்து 730 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், சீரற்ற காலநிலை காரணமாக 4 மரணங்கள் பதிவாகியுள்ளன என்றும் ஆயிரத்து 247 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.