ரொரண்டோ எட்டோபிகோக்கில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 28 வயது இளைஞன் உயிரிழந்ததோடு மேலும் மூவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
குறித்த துப்பாக்கி பிரயோகம் சம்பந்தமாக ரொரண்டோ காவல்துறையினர் தெரிவித்துள்ளதாவது,
எமக்கு பிற்பகல் 2.30 மணிக்கு கிடைத்த அழைப்புக்கு ஏற்ப மார்ட்டின் க்ரோவ் சாலையில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்புக்கு விரைந்திருந்தோம்.
அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆடம்பர வாகனங்களில் துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்ட அடையாளங்கள் காணப்பட்ட நிலையில் அவற்றை அண்மித்துப் பார்த்தபோது நால்வரின் இரத்தவெள்ளத்தில் இருப்பதை அவதானித்தோம்.
இதன்போதுஅவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தபோது ஒருவர் உயிரிழந்து விட்ட நிலையில் ஏனை மூவரும் தீவிர சிகிச்சைப்பரிவில் உள்ளனர்.
அதேநேரம், இந்த துப்பாக்கி பிரயோகம் சம்பந்தமான ஆரம்ப கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ரொரண்டோ காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.