கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு எதிராகவே, தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிக்கும் என அதன் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த விடயம் தொடர்பான விவாத்திற்கு செலவாகும் தொகையை கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துமாறு எதிர்கட்சி கோரிக்கை விடுத்த போதிலும் அது நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் கூட்டமொன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.