பிரிட்டன் மற்றும் இந்தியாவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா தொற்றை அழிப்பதில், ‘கோவாக்சின்’ தடுப்பூசி அதிக செயல்திறன் பெற்றுள்ளதாக, பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹைதராபாதைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், கோவாக்சின் தடுப்பூசியை உள்நாட்டிலேயே தயாரித்து விநியோகித்து வருகிறது.
இந்த தடுப்பூசியின் செயல்திறன் குறித்து தேசிய தொற்று நோயியல் நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வு முடிவுகள், தொற்று நோய்கள் குறித்து மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
இது குறித்து, பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரிட்டனில் கண்டறியப்பட்ட பி.1.1.7 மற்றும் இந்தியாவில் கண்டறியப்பட்ட பி.1.617 ஆகிய அதிக வீரியம் உடைய புதிய வகை உருமாறிய வைரஸ்களை அழிப்பதில், கோவாக்சின் தடுப்பூசியின் செயல் திறன் சிறப்பாக உள்ளதாக அந்த ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. என்று குறிப்பிடப்பட்டுள்ளது.