பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளத்தை (ட்விட்டர்)எலான் மஸ்க் (Elon Musk) கையகப்படுத்தியுள்ள நிலையில், பற்பல அதிரடி அறிவிப்புகள் வெளியிட்டு வருகிறார்.
குறிப்பாக ட்விட்டர் (Twitter) சமூக வலைதளத்தை வாங்கிய பிறகு எக்ஸ் (X) என்று பெயர் மாற்றம் செய்ததை அடுத்து கணக்கு வைத்திருப்போர் நீல நிற டிக் (Verified Blue Tick) தேவைப்பட்டால் அதற்கு தனி சந்தா (Subscribtion) செலுத்த வேண்டும் என்ற திட்டத்தை மஸ்க் அண்மையில் அறிமுகப்படுத்தினார்.
அந்த வகையில், அண்மையில் மேலும் ஒரு அதிரடி வசதியை அறிமுகப்படுத்தியுள்ளார். அதன்படி அனைவரும் பார்க்கும் வகையில் இருந்த லைக்ஸ் வசதியை இனி பதிவிடுபவர் மட்டுமே பார்க்கும் வகையில் மாற்றி அமைத்துள்ளார்.
தாக்குதல்கள் நடத்தும் வாய்ப்புகள்
இதன்படி, சந்தா செலுத்தினால் மட்டுமே யார் லைக்ஸ் செய்திருக்கிறார்கள் என்ற விவரம் வழங்கப்பட்டு வந்த நிலையில் இது இனி அனைவருக்கும் கிடைக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தனிப்பட்ட ஒரு பதிவை லைக் (Like) செய்யும்போது, லைக் செய்பவரை மற்றவர்கள் வசை பாடும் பிரச்சனைகளும், தாக்குதல்கள் நடத்தும் வாய்ப்புகள் அதிகரித்தன. தனிப்பட்ட நபரை தாக்கும் சம்பவங்களை குறைக்கும் நோக்கிலும், தனியுரிமை கொள்கை காரணமாகவும் லைக் வசதி தனிப்பட்ட ரீதியில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதிரடி நடவடிக்கை
அந்த வகையில், யார் லைக் செய்திருக்கின்றனர் என்று பார்க்கும் வசதியை பிரைவேட் ஆக மாற்றுவதன் மூலம் “for you” என்ற தனிப்பட்ட பதிவுகளை பயனர்கள் அதிகம் பெற முடியும் என்று எக்ஸ் வலைதள பொறியாளர்கள் கூறுகின்றனர்.
மேலும், எலான் மஸ்க்கின் இந்த மற்றொரு அதிரடி நடவடிக்கைக்கு எக்ஸ் பயனர்கள் பெரும்பான்மையினர் வரவேற்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.