கனடாவில் ( Canada) வீடொன்றின் மீது மர்மக்கும்பல் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன் 3 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் கனடாவின் வாகனில் உள்ள காசா நோவா டிரைவ் என்ற இடத்தில் நேற்று (21) இடம்பெற்றுள்ளது.
யார்க் ( York)பிராந்திய காவல்துறை அதிகாரிகள் இந்த தாக்குதல் குறிவைக்கப்பட்ட மற்றும் தனிப்பட்ட ஒன்று என்றும், பொதுமக்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் நம்புகின்றனர்.
துப்பாக்கி சூடு
ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வீட்டில் வசிப்பவர்களுக்கும் இடையிலான உறவு குறித்து எந்த விவரங்களையும் அவர் வழங்கவில்லை.
இந்த துப்பாக்கி சூடு குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் நேரத்திலும், பகுதி மக்கள் வெளியே சென்று கொண்டிருந்த நேரத்திலும் நடந்துள்ளது.
காவல்துறையினர் விசாரணை
எனவே இந்த தாக்குதல் குறித்து விவரம் தெரிந்த யாரேனும் இருந்தால் முன்வந்து தகவல் வழங்குமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.