காசா (gaza) போரில் இஸ்ரேல் (Israel) நிச்சயம் தோற்கும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் (Hezbollah) இடையே நடக்கும் போரில், இஸ்ரேலுக்கு தேவையான பாதுகாப்பு ஆதரவை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
ஆனால், இதுபோன்ற போரில் இஸ்ரேல் நிச்சயம் தோற்கும் என ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா
லெபனானைப் பாதுகாக்கும் அதே வேளையில் தனது சொந்த அமைப்பைப் பாதுகாக்கும் திறன் ஹிஸ்புல்லாவுக்கு உண்டு என்றும் ஈரான் கூறுகிறது.
இதற்கிடையில், இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் கெட்ஸ் சமீபத்தில் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லாவுக்கு எச்சரிக்கை விடுத்தார்,
மேலும் ஹிஸ்புல்லாவால் இஸ்ரேலுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலுக்கு பதிலளிக்க தேவையான முடிவுகள் விரைவில் எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.