தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களம் சிங்கள பௌத்த தேசியவாத கொள்கைகளின் அடிப்படையில் செயற்பட முடியுமான என்று முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் சட்டத்தரணிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் செம்மலை என்னும் கிராமத்தில் அமைந்துள்ள நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் புதிதாக புத்தர் சிலையொன்று அமைக்கப்பட்மை தொடர்பில் எதிர்ப்பை வெளியிட்டு தொடரப்பட்டிருந்த வழக்கு விசாரணைகளின் போது சட்டத்தரணிகள் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த பகுதியில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் இருக்கின்றனவா என நீதிமன்றம் அகழ்வு ஆராய்ச்சித் திணைக்களப் பணிப்பாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
பௌத்த விஹாரை மற்றும் சிலை அமைப்பது தொடர்பில் தலையீடு செய்வதற்கு தொல்பொருள் ஆராய்ச்சித்திணைக்களத்திற்கு எவ்வித அதிகாரமும் கிடையாது என நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் நீதிமன்றில் வழங்கியுள்ள ஆவணங்கள் ஒன்றுக்கு ஒன்று முரணானவை எனவும் சட்டத்தரணிகள் நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளனர்.





