பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் இருந்து, வழி தவறி, இன்று அதிகாலை, ஜம்மு – காஷ்மீருக்குள் நுழைந்த இரண்டு சிறுமிகள் இந்தியப் படையினரிடம் பிடிபட்டுள்ளனர்.
தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்த சிறுமிகளைக் கண்ட இந்தியப் படையினர், , அவர்களைப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
இதன்போது, அவர்கள் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் அப்பாஸ்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
தவறுதலாக இந்திய பகுதிக்குள் நுழைந்தது தெரியவந்துள்ள நிலையில், சிறுமிகளை பாகிஸ்தானிடம் ஒப்படைக்க இந்தியப் படையினர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.





