காங்கிரஸ் கட்சியின் தலைமை மீது கட்சியின் மூத்த தலைவரான கபில் சிபல் தெரிவித்த விமர்சனத்தை அடுத்து, அவரது வீட்டுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியில் இப்போது தலைவர்களே இல்லை என்றும், முடிவுகளை தற்போது யார் எடுக்கிறார்கள் என்பதே தெரியவில்லை என்றும், மூத்த தலைவரான கபில் சிபல் கூறியிருந்தார்.
கபில் சிபலின் இந்த பேச்சு காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் உள்ள அவரது வீட்டின்முன்பாக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள்.
“கபில் சிபில் விரைவில் குணமடைந்து வாருங்கள்” என்ற பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் நடத்திய அவர்கள், அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
இதன்போது கபில் சிபல் வீட்டை நோக்கி தக்காளிகள் வீசப்பட்டதுடன், அவரது மகிழுந்தையும் சேதப்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மா கண்டனம் தெரிவித்துள்ளார்.