ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஒப்பந்தங்கள் எதுவும் இன்றி, பிரித்தானியா வெளியேறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளாக, பிரதமர் போரிஸ் ஜோன்சன் (boris Johnson) தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றித்தில் இருந்து பிரித்தானியா வெளியேறும் ‘பிரெக்சிட்’ நடவடிக்கைகளில், சிக்கல்கள் நீடித்து வருகின்றன.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பிரித்தானிய பிரதமர், ஐரோப்பிய ஒன்றியத்துடன், உடன்பாடு எட்டப்படாமல் போகலாம்.
இதனால், ஐரோப்பிய ஒன்றியத்துடன் அவுஸ்ரேலிய கொண்டுள்ள உறவைப் போன்ற ஒரு தீர்வை நாங்கள் விரைவில் பெறுவோம்.“ என்ற கூறியுள்ளார்.
அத்துடன் எந்த உடன்பாடும் இல்லாத பிரெக்சிட்டுக்குத் தயாராகுமாறு தனது அமைச்சர்களை பிரித்தானிய பிரதமர் அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.





