இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விடுதலை தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் பழனிசாமி அவசர கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
அந்தக் கடிதத்தில் அவர், “இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 36 தமிழக மீனவர்கள் மற்றும் 5 படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் தலையிட்டு மீனவர்களை மீட்க வெளியுறவுத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழக முதல்வர் அந்த கடிதத்தில் கோரியுள்ளார்.





