நாகபட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் பகுதியில் 3 சிறிலங்காமீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள், படகுடன் கரை ஒதுங்கிய நிலையில், உள்ளூர் மீனவர்கள் அளித்த தகவலை அடுத்து தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
படகு பழுதடைந்து, வேதாரண்யத்தில் கரை ஒதுங்கியதாக இலங்கை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.





