இந்தோனேசிய போலீஸ் விமானம் 13 பேருடன் தகவல் கட்டுப்பாட்டு அறை தொடர்பை இழந்து மாயமாகியுள்ளது.
விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என்று தேடுதல் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் அருகேயுள்ள பதாம் தீவுக்கு சுமத்ரா தீவுகளின் பங்கா தீவிலிருந்து 5 ஊழியர்கள் 8 பயணிகளுடன் புறப்பட்ட இந்தோனேசிய போலீஸ் விமானம் புறப்பட்ட 50 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்து மாயமாகியுள்ளது.
மென்சானக் மற்றும் செபங்கா தீவுகளுக்கு இடையே கடலில் தேசிய மீட்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக அதன் தலைவர் ஹென்றி சோலிஸ்ட்யோ தெரிவித்தார்.
இதற்கிடையே இருக்கை, செல்போன் உள்ள பை மற்றும் போலீஸ் ஆவணங்களைக் கண்டதாக கிராமத்தினர் தெரிவித்துள்ளனர்.





