இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வுக்கு எதிராக திறப்பட செயலாற்றுவதாக பாரத் பயோ டெக் (Bharat Bio Tech) நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து பாரத் பயோடெக் (Bharat Bio Tech) நிறுவனம், தனது கீச்சகப்பக்கத்தில், நமது இந்தியாவின் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி இங்கிலாந்தின் புதுவகை வைரசையும் தடுக்கும் ஆற்றல் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் பரவிய புதுவகை கொரோனா வைரஸ், சீன வைரசைக் காட்டிலும் அதிக பரவுதல் வேகம் கொண்டது. இதன் நோயெதிர்ப்புத் திறனில் புதிய வகை வைரஸ் மறைந்து கொள்ளும் தன்மையுடையதாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது





