பங்களாதேசில் புத்தக பதிப்பாளரை கொன்ற வழக்கில் 8 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேசில் 2015-ம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் பைசல் அபெதின் தீபன் என்ற புத்தக பதிப்பாளர், டாக்கா பல்கலைக்கழகம் அருகே அமைந்துள்ள சந்தையில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை வழக்கில் 8 பேர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, டாக்கா பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.
விசாரணைகளின் முடிவில், 8 பேர் மீதான குற்றச்சாட்டும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கருதிய நீதிபதி அனைவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளார்.
குற்றவாளிகள் அனைவரும் தடை செய்யப்பட்ட அன்சார் அல் இஸ்லாம் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.





