தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும், மேற்குவங்கம், கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில் ஆளும்கட்சிகளே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் ஐஏஎன்எஸ் (IANS) மற்றும் சி-வோட்டர் (C-voter) கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், கேரளாவில் ஆளும் இடதுசாரி கூட்டணி, அசாமில் பாஜக கூட்டணி ஆகியன ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் என்று இந்தக் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் அதிமுகவும் , புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணியும் ஆட்சியை இழக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்கத்தில் உள்ள 294 இடங்களில், முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 156 இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும், பாஜக 100 இடங்களைப் கைப்பற்றும் என்றும், கணிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில், இடது ஜனநாயக முன்னணி 87 இடங்களைப் பெற்று ஆட்சி அமைக்கும் என்றும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 51 இடங்களை கைப்பற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அசாமில், ஆளும் பாஜக 70 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும், காங்கிரஸ் கூட்டணி 47 இடங்களையே கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில், அதிமுக – பாஜக கூட்டணி 19 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், திமுக கூட்டணி 234 இடங்களில் 158 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், அதிமுக – பாஜக கூட்டணிக்கு 62 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும். இந்தக் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.





