செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் ஸ்பேஸ் எக்ஸ் ( spacex) நிறுவனத்தின் ஸ்டார் ஷிப் (Starship) விண்கலம், சோதனை முடிந்தவுடன், வெடித்து சிதறியுள்ளது.
செவ்வாய் கிரகத்திற்கு பயணிக்கக் கூடிய ‘ஸ்டார் ஷிப்’ (Star ship) விண்கலத்தின் முன்மாதிரி நேற்று அறிமுகம் செய்யப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அமெரிக்காவின் டெக்சாஸ் (Texas) மாநிலத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இந்த விண்கலம் ஏவப்பட்டது.
வெற்றிகரமாக பயணத்தை தொடங்கிய ‘ஸ்டார் ஷிப்’ (Star ship) விண்கலம், பின்னர் சிறிய தடுமாற்றத்துடன் தரையிறங்கி, நிலத்தை தொட்ட சில விநாடிகளில் தீப்பிடித்து வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.
இந்த விண்கலம் வெடித்துள்ள போதும் தமது எதிர்கால ஆய்வுக்கு தேவையான முக்கிய விவரங்கள் வெற்றிகரமாக சேகரிக்கப்பட்டுள்ளதாக ஸ்பேஸ்எக்ஸ் ஸ்பேஸ் எக்ஸ் ( spacex) நிறுவனத்தின் தலைவர் தனது கீச்சகப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.





