சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் இடையில், தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுக்களில் இன்று இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, திமுக சார்பில் ஸ்டாலினும், காங்கிரஸ் சார்பில் அழகிரியும் உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளனர்.
இதன்படி, காங்கிரசுக்கு 25 சட்டசபை தொகுதிகள், ஒதுக்கப்பட்டுள்ளதுடன், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியும், ஒரு ராஜ்யசபா ஆசனமும் ஒதுக்கப்பட்டுள்ளது.





