தே.மு.தி.க. வார்த்தைகளை அளந்து பேச வேண்டும், இல்லையெனில் பதிலடி கொடுப்போம் என அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. விலகியமை குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“தே.மு.தி.க.வின் விலகல் முடிவு துரதிர்ஷ்டவசமானது. கூட்டணியில் இருந்து விலகுவதால் சேற்றை வாரி இறைக்க கூடாது.
நாங்கள் கடைசி வரை கூட்டணி தர்மத்தை மீறவில்லை. கூட்டணியில் இருந்து விலகிய பின்னர் கீழ்த்தரமாக பேசக்கூடாது.
கீழ்த்தரமான அரசியலை தொடர்ந்தால் தேமுதிக.விற்கு எங்களால் பதிலடி கொடுக்க முடியும்.
தே.மு.தி.க.விற்கு அங்கீகாரம் கொடுத்த நன்றியை மறந்து விட்டு பேசக் கூடாது.
இதனால் அதிமுக.,விற்கு பாதிப்பு இல்லை; தே.மு.தி.க.விற்கு தான் பாதிப்பு ஏற்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.





