புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் என்ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பா.ஜ.க மற்றும் அதிமுக 14 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தொகுதி பங்கீடு மற்றும் ரங்கசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது உள்ளிட்ட விவகாரத்தில், பா.ஜ.க, அதிமுக, என்ஆர் காங்கிரஸ் கூட்டணிக்குள் இழுபறி காணப்பட்டு வந்தது.
இந்த நிலையில், தொடர் பேச்சுக்களில் சுமூகமான தீர்வு ஏற்பட்டு, என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, புதுச்சேரி மாநில பா.ஜ.க தலைவர் சாமிநாதன் ஆகியோர், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.





