அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை, ஜப்பானிய பிரதமர் யோஷிஹைடே சுகா ( Yoshihide Suga) சந்திக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தச் சந்திப்பு அடுத்த மாதம் 9ம் திகதி வெள்ளை மாளிகையில் நடைபெறும் என்று ஜப்பானிய நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்போது இருதரப்பு நட்புறவை வலுப்படுத்தவும், இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களில் சுதந்திரமான பயணத்தை உறுதி செய்வது குறித்தும் இரு தலைவர்களும் உடன்பாடு எட்டுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்திப்பதற்காக, ஜப்பானிய பிரதமர் யோஷிஹைடே சுகா ( Yoshihide Suga) ஏப்ரல் மாத நடுப்பகுதியில் அமெரிக்கா செல்லவுள்ளார் என்று, ஜப்பானிய அமைச்சரவையின் தலைமை செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்மூலம், ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சந்திக்கும் முதலாவது வெளிநாட்டு தலைவர் என்ற சிறப்பை ஜப்பானிய பிரதமர் சுகா பெறவுள்ளார்.





