அமைதி ஒப்பந்தத்தின் படி, எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதிக்குள் அமெரிக்க துருப்புக்கள் வெளியேற வேண்டும் என தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்று வரும் மாநாட்டில், தலிபான் பேச்சுவார்த்தைக் குழு உறுப்பினர் சுஹைல் ஷஹீன் (Suhail Shaheen) இதனைத் தெரிவித்தார்.
அமைதி ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்டுள்ளபடி அமெரிக்கப் படையினர் அனைவரும் கெடு திகதிக்குள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியே ஆக வேண்டும்.
மே முதலாம் திகதிக்கு மேலும் அந்த நாட்டுப் படையினர் ஆப்கானிஸ்தானில் இருந்தால் அது அமைதி ஒப்பந்தத்தை மீறிய செயலாகும் என அவர் மேலும் கூறினார்.





