அமெரிக்காவில் மியாமி கடற்கரை நகர முதல்வர் அவசரகால நிலையையும், ஊரடங்குச் சட்டத்தையும் பிரகடனம் செய்துள்ளார்.
சனிக்கிழமை நகரில், அதிகாரிகளால் கையாள முடியாதளவுக்கு கூட்டம் கூடியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
“விதிமுறைகளைப் பின்பற்றும் எண்ணமின்றி, ஏராளமானோர் வருகிறார்கள், இதன் விளைவாக ஒரு குழப்ப நிலை மற்றும் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது, அதிகாரிகளால் தாங்கிக் கொள்ளக் கூடியதை விட அதிகம்.
ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதை அடுத்து, மியாமி கடற்கரையில் இன்று அதிகாலை பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மியாமி கடற்கரை நகரில், 72 மணி நேரத்துக்கு ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.





