யாழ்.மாவட்டத்தில் உள்ள சகல திரையரங்குகளையும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் இதனை தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக பண்டிகைக் காலத்தில் திரையரங்குகளில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் ஒன்று கூடுவதற்கு சந்தர்ப்பம் காணப்படும் நிலையிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.





