சிறிலங்கா – ஓமான் நாடுகள் இடையிலான இராஜதந்திர உறவுக்கு 40 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் சிறப்பு செய்தியை எடுத்துக்கொண்டு நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் ஓமானுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவின் 40 ஆவது வருட ஆரம்பத்தை முன்னிட்டு இரு நாடுகளுக்கும் இடையில் விரிவுபடுத்தப்பட்ட அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட உறவுகளை பலப்படுத்துவது தொடர்பில் ஓமான் நாட்டு சுல்தான் ஹைதம் பின் தாரிக்கு, அனுப்பி வைக்கப்பட்ட பிரதமரின் முக்கிய செய்தி, ஓமானின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு விவகாரங்களுக்கான துணைப் பிரதமர் சையித் ஆசாத் பின் தாரிக் அல் சையத்திடம் கையளிக்கப்பட்டது.
குறித்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் விவாதிக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்படடுள்ளது.





