ஒக்ஸ்போர்ட் நிறுவனத்தின் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட பெண் ஒருவருக்கு குரு உறைதல் ஏற்பட்டுள்ளது.
கியூபெக்கைச் சேர்ந்த பெண் ஒருவருக்கே இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளது.
கனடாவில் அஸ்ட்ராஜெனெகா செலுத்தப்பட்ட பின்னர் இவ்வாறான நிலைமையொன்று ஏற்படுவது இதுவே முதற் சந்தர்ப்பமாகும்.
இந்நிலையில் அப்பெண் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ச்சியாக சிகிச்சைகள் அளிக்கப்படுவதாக கியூபெக் சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை கனடாவில் 7 இலட்சம் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்துவதற்காக விநியோகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.