ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு விதிக்கப்பட்ட தடையை 11 நாட்களுக்குப் பின்னர், அமெரிக்கா நீக்கியுள்ளது.
இந்த தடுப்பூசி போட்டுக் கொண்ட சிலருக்கு இரத்த உறைவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானதை அடுத்து ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசி செலுத்துவதை அமெரிக்கா நிறுத்தி வைத்திருந்தது.
இந்த தடுப்பூசியால் ஏற்படும் அபாயத்தை விட, சாதகமான பலன்கள் அதிகமாக இருப்பதால், தடையை நீக்குமாறு பரிந்துரைப்பதாக அமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு முகாமை அறிவித்துள்ளது.
இதனை அடுத்தே இந்த தடுப்பூசிக்கான தடை நீக்கப்பட்டுள்ளது,
எட்டு மில்லியன் பேருக்கு ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசி செலுத்தப்பட்டதில், 15 பேருக்கு மாத்திரமே, இரத்த உறைவு கண்டுபிடிக்கப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.





