செய்திகள்

வீடுகளில் தங்கியிருக்கும் உத்தரவை, மேலும் நீடிப்பதற்கு முதல்வர்கள் கோரிக்கை

வீடுகளில் தங்கியிருக்கும் உத்தரவை, மேலும்  நீடிப்பது குறித்து  விரைவில் அறிவிக்க வேண்டும் என்று ஒன்ராறியோ அரசாங்கத்திடம், பல்வேறு நகரங்களின் முதல்வர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஒன்ராறியோ அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள வீடுகளில்  தங்கியிருக்கும் உத்தரவு வரும் 20ஆம் நாளுடன் முடிவடையவுள்ளது. எனினும், தொற்றுப்பரவல் இன்னமும் முழுமையான   கட்டுப்பாட்டுக்குள் வராத நிலையில், முடக்க நிலையை மேலும்  நீடிக்க வேண்டும் என்று ஒன்ராறியோ அரசாங்கத்திடம்,  வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மே 20ஆம் நாளுக்குப் பின்னர், வீடுகளில்  தங்கியிருக்கும் உத்தரவை நீடிப்பது தொடர்பான மேலதிக  விபரங்களை கூடிய விரைவில் மாகாண அரசாங்கம் அறிவிக்க  வேண்டும் என்று ரொறன்ரோ முதல்வர் ஜோன் ரொறி மற்றும்  ஹமில்டன்  மாநகர முதல்வர் பிரெட்  ஈசென்பேகர் (Fred Eisenberger) ஆகியோர், கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் பல நகர நிர்வாகங்களும் இந்த வேண்டுகோளை விடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது

Read more

ஒன்ராரியோவில் திறந்தவெளி பகுதிகளை மீளவும் திறப்பதற்கு யோசனை

ஒன்ராரியோவில் திறந்தவெளி பகுதிகளை மீளவும் திறப்பதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனினும், அவ்விதமான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டாம் என்று சிரேஷ்ட சமூகவியலாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தற்போதைய நிலையில்...

Read more

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டில் 10.1 சதவீதமாக அதிகரிக்கும்;ஐ.நா

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டில் 10.1 சதவீதமாக அதிகரிக்கும் என ஐ.நா தெரிவித்துள்ளது. ஐ.நாவின் உலக பொருளாதார சூழல் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் அறிக்கை புதிப்பிக்கப்பட்டு...

Read more

பிரதமர் உண்மை தன்மையை உணர்ந்து செயற்பட வேண்டும்; ராகுல்

கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், பிரதமர் உண்மை தன்மையை உணர்ந்து செயற்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்....

Read more

உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 இலட்சம் ரூபா நிவாரண உதவி

கொரோனா சிகிச்சைப் பணியில் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 இலட்சம் ரூபா நிவாரண உதவி தொகையாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள...

Read more

தெலுங்கானாவில் இன்று முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு

தெலுங்கானாவில் இன்று முதல் எதிர்வரும் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக  இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக...

Read more

இஸ்ரேலின் லோட் நகரம் முழுவதும் அவசரநிலை பிரகடனம்

வன்முறையை கட்டுப்படுத்தும் விதமாக இஸ்ரேலின் லோட் நகரம் முழுவதும் அவசரநிலை பிரகடனத்தை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று அறிவித்தார். அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதன் மூலம் லோட் நகரில் இஸ்ரேலிய...

Read more

இத்தாலியின் லாசியோ பிராந்தியத்தில் தடுப்பூசி முற்பதிவு

தலைநகர் ரோமை மையமாகக் கொண்ட இத்தாலியின் லாசியோ பிராந்தியம், அஸ்ட்ராஸெனெகா மற்றும் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வதற்கான முன்பதிவுகளை மேற்கொள்ளுமாறு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. எனினும், முன்னதாக...

Read more

இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா மாறுபாடு 44 நாடுகளில்

முதன் முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா மாறுபாடு சுமார் 44 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. B.1.617 என்ற கொரோனா மாறுபாடு கடந்த அக்டோபர்...

Read more

அமெரிக்காவில் 12 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா

அமெரிக்காவில் 12 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு பைஸர் கொரோனா தடுப்பூசியை செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்நாட்டு உணவு மற்றும் மருந்தக நிர்வாகத்தினால் இதற்கான அனுமதி...

Read more
Page 21 of 952 1 20 21 22 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.