செய்திகள்

ரொரண்டோவில் கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் படுகாயம்

ரொரண்டோ நகரப் பகுதியில், கத்திக் குத்துக்கு இலக்காகி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். Sherbourne Street பகுதியில் நேற்றிரவு 11 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்....

Read more

சிறிலங்கா தொடர்பான நிலைப்பாட்டை எழுத்துமூலமாக ஜெனிவாவுக்கு அனுப்பியது இந்தியா

ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவில் சிறிலங்கா அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணையை இந்தியா புறக்கணித்தாலும், தன் நிலைப்பாட்டை இந்தியா எழுத்துப் பூர்வமாக அறிவித்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர்...

Read more

சிறிலங்காவின் புதுடில்லி தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டது

புதுடில்லியில் உள்ள சிறிலங்காவின் உயர்ஸ்தானிகராலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை உயர்ஸ்தானிகராலயம் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு...

Read more

வைத்தியசாலையில் தமிழக முதல்வர் பழணிசாமி

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைந்தக்கரையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு குடலிறக்க நோய் உள்ளதாகவும், அதற்காக  அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி...

Read more

இந்தியாவில் தடுப்பூசியை 10மடங்கு அதிகரிப்பற்கு நடவடிக்கை

கொவக்ஸின் தடுப்பூசி உற்பத்தியை  10 மடங்கு  அதிகரிப்பதற்கு  நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாக  மத்திய  சுகாதார  அமைச்சர்  ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். இது குறித்து கீச்சகப் பக்கத்தில் அவர் செய்துள்ள பதிவில், கொரோனா  சிகிச்சையின்போது அளிக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்தின் தாயரிப்பு மே மாதத்திற்குள் 74.1 இலட்சமாக இரட்டிப்பாகப்படும் எனத்  தெரிவித்துள்ளார். அந்த மருந்தின் தயாரிப்பை அதிகரிப்பதற்கு 20 உற்பத்தி ஆலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுடன், ஏற்றுமதி செய்வதற்கு தடை  விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன் சிறிய மாநிலங்களுக்கு 7 நாட்களுக்கு ஒரு முறையும், பெரிய மாநிலங்களுக்கு 4 நாட்களுக்கு ஒருமுறையும் கொரோனா தடுப்பூசிகள் விநியோகிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read more

நவால்னிக்கா ரஷ்யாவை எச்சரித்தது அமெரிக்கா

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸே நவால்னி (Alexei Navalny) சிறையில் உயிரிழந்தால், கடுமையான பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ரஷ்யாவை அமெரிக்கா எச்சரித்துள்ளது. வலது கால்...

Read more

எகிப்தில் தடம்புரண்டது தொருந்து; 11பேர் பலி

எகிப்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டதில், 11 பேர்  உயிரிழந்துள்ளதாக  சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவ்விபத்தில் 100க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் கெய்ரோவுக்கு வடக்கே உள்ள பன்ஹா நகரத்தில் நேற்று  இடம்பெற்ற இந்த விபத்தில், 4 தொடருந்து பெட்டிகள்  தண்டவாளத்தை விட்டு தடம்புரண்டுள்ளதாக, அந்நாட்டு தொடருந்து திணைக்கள  அதிகாரிகள் தெரிவித்தனர். இதேவேளை, சம்பவ இடத்துக்கு குறைந்தது 50 நோயாளர் காவு  வாகனங்கள் அனுப்பப்பட்டதுடன், காயமடைந்தவர்கள், அருகிலுள்ள  மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக எகிப்தின்  சுகாதார அமைச்சு தெரிவித்தது. அத்துடன், விபத்தினால் தொடருந்துக்கு உள்ளே சிக்கியுள்ளவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக சர்வதேச ஊடகங்கள்  தெரிவித்தன.

Read more

சிரியாவில் அடுத்த மாதம் ஜனாதிபதி தேர்தல்

சிரியாவில் அடுத்த மாதம் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. அந்த நாட்டு ஜனாதிபதி பஷர் அல் அஸாத்தின் அதிகாரத்தை மீள தக்கவைக்கும்...

Read more

காலநிலை விடயத்தில் இணைந்து செயற்பட அமெரிக்கா, சீனா இணக்கம்

காலநிலை மாற்றம் தொடர்பாக ஏனைய நாடுகளுடன் இணைந்து  சீனாவும் அமெரிக்காவும் செயற்பட இணங்கியுள்ளன. சீன, காலநிலை மாற்றத்துறை பிரதிநிதி ஷீ ஹென்ஹூவா   (Xi HAIHUWA) மற்றும் அமெரிக்க பிரதிநிதி ஜோன் கெரிக்கும் (JHON KERRY) இடையே ஷங்காயில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை  அடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய இரு நாடுகளும் காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தும்  காரணியான கரியமில வாயுவை மட்டுப்படுத்துவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் இந்த வாரம் நடைபெறவுள்ள மாநாட்டிலும் சீனா கலந்து கொள்ளும் என  எதிர்பார்க்கப்படுகின்றது. எவ்வாறாயினும் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் (XI JIN PING) இந்த சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பில்  இதுவரையில் எந்த கருத்தும் வெளியிடவில்லை.

Read more

அன்னை பூபதியின் மகளுக்கு அச்சுறுத்தல் எச்சரிக்கை

அன்னை பூபதியின் நினைவு தினத்தை அவரது சமாதிக்குச் சென்று அனுஷ்டித்தால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள் என காத்தான்குடி காவல்துறையினர் தமக்கு எச்சரிக்கை...

Read more
Page 59 of 952 1 58 59 60 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.