கிளிநொச்சியில் கடந்த வருட இறுதியில் ஏற்பட்ட வெள்ளம் தொடர்பில் ஆராய்வதற்கு வட மாகாண ஆளுநரினால் நியமிக்கப்பட்ட புதிய விசாரணைக் குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த இடைக்கால அறிக்கை வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, ஆளுநரின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு மேலும் 2 வார கால அவகாசம் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டமை உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து விசாரணை அதிகாரிகளால் கிளிநொச்சி மாவட்டத்தின் சில பகுதிகளில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு இந்த இடைக்கால அறிக்கை தயார்செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த நாளிலிருந்து 21 நாட்களுக்குள் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்த நிலையில், குறித்த விசாரணைக் குழுவின் பணிகள் கடந்த மாதம் 23 ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைசிறப்புச் செய்திகள்
இரணைமடுக் குளத்தின் புதிய விசாரணைக் குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
Feb 14, 2019, 12:33 pm0
39
Previous Postகாலநிலை மாற்றம் தொடர்பான திட்டங்களை அமல்படுத்துவதற்கு சில அரசியல் கட்சிகள் தடை
Next Post💘இனிய காதலர்தின நல்வாழ்த்துக்கள்.💝