முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

இலங்கையில் சிறிபான்மையினருக்கு எதிராக நிலைமை மீண்டும் மோசமடைய முன்னர் விழித்துக் கொள்ளமாறு ஐ.நா அங்கத்துவ நாடுகளிடம் கஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

1268

இலங்கையில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக நிலைமை மீண்டும் மோசமடைவதற்கு முன்னர் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அங்கத்துவ நாடுகள் விழித்துக் கொள்ள வேண்டும் என்று, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்றுமுன்தினம் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை விடயம் ஆராயப்பட்ட போது, அதில் கலந்துகொண்டு அங்கு உரையாற்றும்போதே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

உண்மையான நல்லிணக்கத்துக்கு மட்டுமன்றி, மீண்டும் மோசமான நிகழ்வுகள் இடம் பெறாமல் இருக்க வேண்டும் என்பதால், பொறுப்புக் கூறல் என்பது விட்டுக் கொடுக்கப்படவே முடியாததாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் பொறுப்புக் கூறல் விடயத்தில் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகமோ, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகமோ, அங்கத்துவ நாடுகளோ, தங்களை கட்டாயப்படுத்தி எதுவும் செய்ய முடியாது என்ற எண்ணத்திலும், குற்றவிலக்களிப்பைத் தொடர்ந்தபடி, தங்களின் விருப்பப்படி எப்படியும் செயற்படலாம் என்ற தத்துவத்திலும் தான், போர் முடிந்து எட்டு ஆண்டுகளாக இலங்கை அரசு தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன் தொடர்ச்சியாகவே, இலங்கையை பௌத்த, சிங்கள இனத்துவ நாடாக மாற்றும் தனது திட்டத்தை, காலத்தால் மோசமான பாதிப்புகளுக்கு மத்தியில் அது தீவிரப்படுத்தியிருக்கின்றது எனவும், தமிழர்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டமை தொடக்கம், இலங்கைக்குள் இருக்கும் தமிழர் தேசம் ஒழுங்கு முறையாகச் சீர்குலைக்கப்பட்டு சிதறடிக்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் விபரித்துள்ளார்.

உலகம் விழித்துக் கொள்ள முன்னர், தமிழர்களுக்கு எதிரான இன அழிப்புக் கட்டமைப்பை அழிக்கலாம் என்ற இலக்கை அடையலாம் என்று நம்பிக்கையில் செயற்பட்ட இலங்கை, இப்போது சிங்களப் பேரினவாதத்துக்குச் சவால் விடும் வகையில் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள முஸ்லிம்கள் பக்கம் திரும்பியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே இலங்கையில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக நிலைமை மோசமடைய முன்னர் விழித்துக் கொள்ளுமாறு அங்கத்துவ நாடுகளை நாம் மன்றாடி வேண்டுகிறோம் எனவும், இலங்கை விடயத்தில் மாற்று வழியைத் தேடும் ஆணையாளரின் அறிவிப்பை வரவேற்கும் அதே சமயம், மியன்மார் விவகாரத்தை அனைத்துலகக் குற்றவியல் நீதி மன்றத்திடம் வழிப்படுத்த வேண்டும் என்ற ஆணையாளரின் பரிந்துரை, இலங்கை நிலைமைக்கும் பொருத்த மானது என்று நாம் கோருகின்றோம் எனவும் செல்வராஜா கஜேந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *