முக்கிய செய்திகள்

அமெரிக்காவில் சர்ச்சைக்குரிய வகையில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கு அந்நாட்டு அரச தலைவர் டொனால்ட் ட்றாம்ப் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

304

அமெரிக்காவில் சர்ச்சைக்குரிய வகையில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கு அந்நாட்டு அரச தலைவர் டொனால்ட் ட்றாம்ப் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவிற்கும் மெக்ஸிக்கோவிற்கும் இடையில் எல்லைச் சுவரை நிர்மானிப்பதற்காக இவ்வாறு அவசரகால சட்டத்தை கையில் எடுக்கத் திட்டமிட்டுள்ளார் எனக் குறிப்பிடப்படுகிறது.
எல்லைச் சுவர் அமைப்பதற்கு 5 பில்லியன் டொலர்கள் நிதி தேவைப்படுவதாகவும் அதற்கான அனுமதியை வழங்குமாறும் ட்றாம்ப் கொங்கிரஸ் சபையில் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க கொங்கிரஸ் சபையின் தீர்மானத்திற்கு சவால் விடுக்கும் வகையில் அவசரகாலச் சட்டத்தின் ஊடாக தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய ட்றாம்ப் திட்டமிட்டுள்ளார்.
அரச தலைவர் ட்றாம்ப்பின் யோசனையானது முழு அளவிலான அதிகார துஸ்பிரயோகம் எனவும் சட்டத்தை உதாசீனம் செய்யும் செயற்பாடு எனவும் ஜனநாயகக் கட்சி செனட்டர்கள் தெரிவித்துள்ளனர்.
ட்றாம்பின் இந்த எதேச்சாதிகார போக்கி;ற்கு குடியரசு கட்சியின் சில செனட்டர்களும் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
3.
அமெரிக்க சட்டமா அதிபராக அரசுத் தலைவர் டொனால்ட் டறம்ப் பரிந்துரை செய்த றுடைடயைஅ டீயசச ஐ செனட்சபை அந்தப் பதவிக்கு உறுதி செய்துள்ளது.
54-45 என்ற வாக்குகளின் அடிப்படையில் அவரது நியமனத்தை செனட்சபை அங்கீகரித்தது.
68 அகவையுடைய றுடைடயைஅ டீயசச, இதற்கு முன்பு ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ்ஷின் ஆட்சிக் காலத்தில் 1991 ஆம் ஆண்டில் இருந்து 1993 ஆம் ஆண்டு வரையும் சட்டமா அதிபராகப் பதவி வகித்திருந்தார்
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *