முக்கிய செய்திகள்

இடைநிறுத்தப்பட்ட பிராம்டன் போக்குவரத்து சேவையின் பேருந்து சேவைகள் மீள ஆரம்பம்

41

கொரோனா தொற்றுப் பரவலை அடுத்து மூன்று வழித்தடங்களில் இடைநிறுத்தப்பட்ட பிராம்டன் (Brampton)  போக்குவரத்து சேவையின் பேருந்து சேவைகள் இன்று ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு பிராம்டனின் கைத்தொழில் வலயத்துக்கான இந்த சேவைகள் ஒரு வாரமாக தவிர்க்கப்பட்டிருந்தன.

அமசோன் பொதிகள் விநியோக மையத்துமன் தொடர்புடைய இடங்களில் ஏற்பட்ட கொரோனா தொற்றை அடுத்து, 11 Steeles, 51 Hereford and 511 Züm  ஆகிய வழித்தடங்களின் ஊடான பேருந்துகள் வழக்கமான சேவையை மேற்கொள்ளவில்லை.

இன்று தொடக்கம் இந்த பேருந்து சேவைகள் வழக்கம் போல இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *