முக்கிய செய்திகள்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ருவாண்டா நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்

688

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆப்பிரிக்க நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக ருவாண்டா நாட்டிற்கு சென்றுள்ளார்.

ருவாண்டா தலைநகர் கிகாலி அனைத்துலக விமான நிலையத்தை இன்று சென்றடைந்த இந்தியப் பிரதரை அந்த நாட்டின் அதிபர் பால் ககமே நேரில் சென்று வரவேற்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இரண்டு நாடுகளின் தலைவர்களும் தனியாக சந்தித்து பேச்சு நடாத்தியதுடன், இருவரும் கூட்டாக ஊடகவியலாளரையும் சந்தித்தனர்.

இதன்போது ருவாண்டாவில் இந்திய தூதரகம் திறக்கப்பட உள்ளதாகவும், இதனால் கடவுச்சீட்டு மற்றும் நுளைவு அனுமதி பெருவதற்கான வசதிகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இரண்டு நாடுகளுக்கும் இடையே தோல் மற்றும் விவசாயம் ஆராய்ச்சி தொடர்பான முக்கிய ஒப்பந்தங்களும் இன்று கையெழுத்திடப்பட்டுள்ளன.

இந்திய பிரதமர் ஒருவர் ருவாண்டா நாட்டிற்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *