இலங்கையில் தூக்குத் தண்டணைகளை நிறைவேற்றுவதற்கு 42 ஆண்டுகளின் பின்னர் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

429

இலங்கையில் குறிப்பிட்ட நபர்களுக்கு மரண தண்டணை நிறைவேற்ற அமைச்சரவை அனுமதி வழங்கி உள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நேற்று கூடிய அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுக்கு தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக மரண தண்டணையை நடைமுறைபடுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை வரலாற்றில் நீரில் மூழ்கடித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை உட்பட பல மரண தண்டணை முறைகள் காணப்பட்ட போதிலும், முதல் முறையாக தூக்கிட்டு கொல்லப்பட்ட சம்பவம் 1812 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ம் நாள் பதிவாகியுள்ளது.

இலங்கையில் இறுதியாக 1976ஆம் ஆண்டு யூன் மாதம் 23ஆம் நாள் தூக்கிட்டு கொல்லப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ள நிலையில், அது முதல் 42 ஆண்டுகளாக தூக்குத் தண்டணை நடைமுறைபடுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *