முக்கிய செய்திகள்

இலங்கை சட்டவிரோத ஆட்கடத்தல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அவுஸ்திரேலியா

2802

சட்டவிரோத ஆட்கடத்தல்களை தடுக்க இலங்கை கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவுஸ்திரேலியா வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்காவிற்கு பணம் மேற்கொண்டுள்ள இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டெர்ன்புல்லும் ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்தித்துப் பேச்சு நடாத்தியுள்ளனர்.

இதன்போதே இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு மேற்கொள்ளப்படும் ஆட்கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை அவசியம் என்று அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய பிரமரின் இந்த வேண்டுகோளுக்கு பதிலகளித்த இலங்கை சனாதிபதி, அவுஸ்திரேலியாவுக்கான ஆட்கடத்தல்களை தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை தமது அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளதுடன், ஆட்கடத்தல் தொடர்பில் அவுஸ்திரேலியா எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கும் தமது வரவேற்பை வெளியிட்டுள்ளார்.

ஆட்கடத்தல் நடவடிக்கைகள் அவுஸ்திரேலியாவுக்கு மாத்திரமல்லாது, முழுப்பிராந்தியத்துக்கும் அச்சம் தருவதாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள மைத்திரிபால சிறிசேனா, ஆட்கடத்தல்களை தடுக்க அவுஸ்திரேலியா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு இலங்கை தமது ஒத்துழைப்பை வழங்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *