முக்கிய செய்திகள்

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் : சுதாரிப்பதற்குள் தாக்குதல் நடத்திவிட்டார்கள்

707

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதல்கள் தொடர்பாக பாதுகாப்பு இராஜாங்க மற்றும் ஊடக அமைச்சர் ரூவான் விஜேவர்தன ஊடக நிறுவனங்களின் பிரதம அதிகாரிகளை சந்தித்தார்.

“இதில் பெரும்பாலானவை தற்கொலை தாக்குதல்கள்.இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.” என்றார்.

முன்பே தகவல்

அவர், “இந்த தாக்குதல் குறித்து முன்பே உளவு அமைப்புகளுக்கு தகவல்கள் வந்தன. ஆனால், சுதாரிப்பதற்குள் இந்த தாக்குதல் நடந்தேறிவிட்டன. இது வெளிநாட்டிலிருந்து திட்டமிடப்பட்ட தாக்குதல்கள். இனவாத பிரச்சனை ஏற்பட வேண்டும் என்று எதிர்பார்த்தே இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன.” என்றார்.

தாக்குதல்கள் தொடரலாம் என பொதுமக்களிடையே அச்சம் நிலவுகிறது. அதை நாம் புறந்தள்ள முடியாது. மேலும் தாக்குதல்கள் நடக்க வாய்ப்புள்ளது என்றார்.

பாடசாலைகள், பல்கலைக்கழகங்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

ரூவான் விஜேவர்தனபடத்தின் காப்புரிமைISHARA S. KODIKARA

சந்தேக நபர்

உளவுத் துறை இந்த தாக்குதல் குறித்து முன்பே வந்த தகவல்களில் ஒருவரின் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது. அவரின் பெயரும் ஷாங்ரி லா நட்சத்திர விடுதியில் இறந்தவரின் பெயரும் ஒன்றாக உள்ளது என்றும் அமைச்சர் ரூவான் விஜேவர்தன ஊடகவியலாளர் சந்திப்பில் கூறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *