முக்கிய செய்திகள்

ஈழத்தமிழ் மக்கள் வாழ்வில் என்றும் மறக்கமுடியாத கரிநாள்…! ” பெப்ரவரி 4.1948″

337

ஈழத்தமிழ் மக்கள் வாழ்வில் கரிநாள் இந்நாள் ஆங்கிலேய அரசினால் தமிழனம் சிங்களத்திடம் சிறை வைக்கப்பட்டநாள்.தமிழர் தேசம் தன் இறைமையைச் சிங்கள தேசத்திடம் முழுமையாக இழந்த கரிநாள். தொடர்ந்து சிங்கள தேசத்தால் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழர் தேச ஆக்கிரமிப்புக்கும் தமிழர்களின் வாழ்வியல் சிதைப்புக்கும் கலாச்சாரச் சீரழிவுக்கும் உட்படுத்திப் புதிய முகவரி எழுதத் தொடங்கிய கரிநாள்.சிங்களம் ஆங்கிலேயர் ஆக்கிரமிப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு தமிழர் தேச ஆக்கிரமிப்பை உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கத் தொடங்கிய நாள்.பல லட்சத்திற்கு மேற்பட்ட தமிழ்மக்களின் இழப்புக்கள்.இவை இன்றும் மாறி மாறிக்கொண்டிருக்கும் சிங்கள இனவெறி அரசுகளினால் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.இக்கரிநாளில் சிங்களத்துடன் கூடிக்களிப்பதை ஈழத்தமிழர்களாகிய நாம் தவிர்த்துக்கொள்வதுடன் இன்றைய நாளில் களியாட்டங்களையும் தவிர்த்துக்கொள்வோம். சிங்கள தேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களைப் புறக்கணிப்போம்.

சர்வதேச மனித உரிமை அமைப்புக்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் முதன்மை ஊடகங்களுக்கும் மின்னஞ்சல் தொலைநகல் தொலைபேசி முகநூல் மூலமாகவும் எம்மின அழிப்பை இக்கரிநாளில் ஓர்மத்துடன் எடுத்துச் செல்வோம்.சர்வதேசத்தின் செவிகளுக்கு எமது நிலையை எடுத்துரைத்து தமிழருக்கான ஒரு நிரந்தர நீதி கிடைக்கும் வரை ஓயோமென இக்கரிநாளில் உறுதி எடுத்துக்கொள்வோம்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *