முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

உங்களுக்கு எவ்வளவு தைரியம்?” அரசியல்வாதிகளை அதிர வைத்த மாணவி

590

ஐ.நா சபையில் பருவநிலை மாற்றம் தொடர்பாக உணர்ச்சிகரமாக உரை ஆற்றினார் இளம் சூழலியல் செயற்பாட்டாளரான கிரேட்டா தன்பெர்க்.

பருவநிலை மாற்றம் தொடர்பாக சரியான கொள்கை வகுக்காத அரசியல்வாதிகளை நோக்கி சரமாரியாக கேள்வி கேட்டார்.

நீங்கள் எங்களை வஞ்சித்துவிட்டீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம்? என சரமாரியாக கேள்வி கேட்டார் கிரேட்டா

கிரேட்டா தன்பெர்க் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராடும் இயக்கத்தின் பிரதிநிதி.

சுவீடன் நாட்டைச் சேர்ந்த இவர் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு வெளியே காலநிலை மாற்றம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி ‘பள்ளிகள் புறக்கணிப்பு’ எனும் கோஷத்துடன் போராடி வருகிறார்.

இவருடைய செயலால் ஈர்க்கப்பட்டு உலகம் முழுவதும் மாணவர்கள் போராட தொடங்கிவிட்டனர். திசையெங்கிய பரவிய இந்த பள்ளிகள் புறக்கணிப்பு போராட்டம் அண்மையில் சென்னையில்கூட நடந்தது.

விமானத்தில் பறப்பதையே அறம் சார்ந்த விஷயமாக மாற்றியதில் க்ரேட்டாவுக்கு ஒரு முக்கிய பங்கு உள்ளது. அதாவது விமானங்கள் அதிகளவில் பசுமைக்குடில் வாயுவை வெளிப்படுத்துகிறது. அதனால் தேவையற்ற விமான பயணங்களை தவிர்க்க வேண்டும் என்று ‘பறத்தல் அவமானம்’ என இவர் பிரசாரம் செய்து வருகிறார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *