எட்டோபிகோ துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தவர் மருத்துவமனையில்…

40

ரொரண்டோ, Etobicoke பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த ஒருவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதன்கிழமை மாலை குறித்த பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, கிடைத்த அழைப்பைத் தொடர்ந்து, அங்கு சென்ற காவல்துறையினர் காயமடைந்திருந்த ஒருவரை மீட்டுள்ளனர்.

காயமடைந்தவரின் நிலை தொடர்பாக காவல்துறையினர் உடனடியாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *