முக்கிய செய்திகள்

ஒன்டாரியோ மாகாணத்தின் பெரும்பான்மையான மக்கள் முதல்வர் டக் ஃபோர்ட்டை ஆதரிக்கவில்லை-Mainstreet Research நிறுவனத்தினால் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு

303

ஒன்டாரியோ மாகாணத்தின் பெரும்பான்மையான மக்கள் முதல்வர் டக் ஃபோர்ட்டை ஆதரரிக்கவில்லை என்று அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
Mainstreet Research நிறுவனத்தினால் இந்த கருத்துக் கணிப்பில் 51 சதவீதமான ஒன்டாரியர்கள் ஃபோர்டை ஆதரிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 15ம் நாள் முதல் 17ம் நாள் வரையில்இந்தக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு சில காலங்களிலேயே டக் ஃபோர்ட் மீது மக்கள் வெறுப்பினை வெளிப்படுத்த தொடங்கியுள்ளமை ஆச்சரியமளிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலைமை நீடித்தால் முன்னாள் முதல்வர் கத்தலீன் வின்னைப் போன்றே ஃபோர்ட்டும் பாரியளவில் மக்களின் ஆதரவினை சடுதியாக இழக்க நேரிடும் என்று தெரிவிக்கப்படுகிறது.
எனினும் தொடர்ந்தும் புறோகிறசிவ் கொன்சவேடிவ் கட்சிக்கான ஆதரவே முன்னிலை பெற்றுள்ளதாக அந்த கருத்துக் கணிப்பின் முடிவுகள் காட்டுகின்றன.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *