முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

கஜேந்திரன் கைதிகளை பார்வையிட அனுமதி மறுப்பு

294

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தங்காலையில் அமைந்துள்ள சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளைப் பார்வையிடுவதற்காக சென்றிருந்தார்.

எனினும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை உறவினர்கள் மட்டுமே பார்வையிட முடியும் என்று கூறி கைதிகளை பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
 
யாழ்.மாவட்டம் மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் கேவில் கிராமத்தில் வசித்து வந்த முன்னைநாள் வடமராட்சிகிழக்கு பிரஜைகள் குழுவின் செயலாளரும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வடமராட்சிகிழக்கு செயற்ப்பாட்டாளருமான செல்வராசா உதயசிவம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கடந்த 2020 மார்ச் 04 ஆம் திகதி கைது செய்யப்பட்டு தொடர்ச்சியான விசாரணைக்களுக்கு உள்ளாக்கப்பட்டுவருகின்றார்.

அவரது விடுதலைக்கு உதவுமாறு அவரது குடும்பத்தினர் கோரிவரும் நிலையில் உதயசிவம் அவர்களது விடதலையை வலியுறுத்தி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கடந்த வருடம் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது

அத்துடன், அவரது விடுதலையை வலியுறுத்தி பாராளுமன்றிலும் உரையாற்றியுள்ளதாகவும், நீதி அமைச்சின் ஆலோசனைக் கூட்டங்களிலும் வலியுறுத்தப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

உதயசிவம் வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத மணல்கொள்ளை மற்றம் போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத மீன்பிடி என்பவற்றிற்கு எதிராக தீவிரமாக செயற்பட்டுவந்தவர்.

இவ்வாறான செயற்பாடுகளால் புலிகளை மீளவும் உருவாக்க முற்பட்டதாக பொய்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இது திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கையாகவே கொள்ள வேண்டியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *