முக்கிய செய்திகள்

கனடாவின் தடுப்பூசித் திட்டம் தாமதமாகாது

234

கனடாவின் தடுப்பூசித் திட்டத்துக்கு பொறுப்பான மூத்த இராணுவ அதிகாரி திடீரென விலகியுள்ள போதும், இந்த பாரிய நடவடிக்கையில் தாமதம் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்று இராணுவ விவகார நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கிங்ஸ்டனில் உள்ள குயீன்ஸ் பல்கலைக்கழக  பேராசிரியரான Christian Leuprecht இதுகுறித்து கருத்து வெளியிடுகையில், மேஜர் ஜெனரல் டெனி போட்டினின் விலகலினால் தடுப்பூசி திட்டம் பாதிக்கப்படாது என்றும், எப்போதுமே இராணுவம் இரண்டாவது கட்டளை அமைப்பை வைத்திருக்கும் என்பதால், தடுப்பூசி திட்டம் தொய்வின்றி தொடரும் என்றும் கூறியுள்ளார்.

ஒரு போரின் போது, ஜெனரல் வெளியேற்றப்பட்டால், அப்போதே களத்தில் இறங்கி, செயற்பாட்டை முன்னெடுக்கும் ஒருவர் இருப்பார்.

உருட்டிக் கொண்டே இருக்கக் கூடிய வகையில் தான் முழு இயந்திரமும் அமைக்கப்பட்டுள்ளது.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *