முக்கிய செய்திகள்

கனடாவில் துப்பாக்கிகளைத் தடை செய்யும் திட்டத்தினை பழமைவாதக் கட்சித் தலைவர் நிராகரித்துள்ளார்

335

கனடாவில் துப்பாக்கிகளைத் தடை செய்யும் திடடத்தினை தாம் நிராகரிப்பதாக பழமைவாதக் கட்சித் தலைவர் ஆன்ட்ரூ ஷீர்(Andrew Scheer) தெரிவித்துள்ளார்.

ஒட்டு மொத்தமாக துப்பாக்கிகளைத் தடை செய்வதற்கு பதிலாக, குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு சட்டவிரோதமாக துப்பாக்கிகளைப் பயன்படுத்தும் குற்றவாளிகளை இலக்கு வைத்து, கனடாவில் துப்பாக்கி வன்முறைகளை கட்டுப்படுத்தப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையிலான நடவடிக்கையினை முன்னெடுப்பதே சிறந்தது எனவும், அதற்கு பதிலாக ஒட்டு மொத்தமாக நாட்டில் துப்பாக்கி அனுமதியை தடை செய்யும் நடவடிக்கைக்கு தாம் ஆதரவளிக்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவில் சட்டவிரோத துப்பாக்கி பயன்பாட்டாளர்களைக் கட்டுப்படுத்தும் வகையில், காவல்துறைக்கு அதிக அதிகாரங்களையும் உபகரணங்கள் உள்ளிடட வசதி வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு பதிலாக, கனடாவில துப்பாக்கிப் பாவனையைத் தடை செய்யக் கோரும் நடவடிக்கைகளை நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் துப்பாக்கி வன்முறைகளைக் கட்டுக்குகள் கொண்டுவருவதற்கான ஏழு அம்ச கொள்கையினையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அவற்றுள், மறுபடியும் மறுபடியும் துப்பாககி வன்முறைகளில் ஈடுபடுவோருக்கும், துப்பாக்கிகளை சட்டவிரோதமாக வினியோகிப்போருக்கும் கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும் எனவும், சட்டபூர்வமாக கொள்வனவு செய்யப்படும் துப்பாக்கிகள், சட்டவிரோத பாவனையாளர்களின் கைகளுக்குச் செல்வதை தடுக்க வேண்டும எனவும் அவர் வலியுறத்தியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *